நாம் படிக்கவேண்டிய நூல்

நாம் படிக்கவேண்டிய நூல்
வேர்ச்சொல் மொழியியல் ஆய்வாளர் ம.சோ.விக்ரர் ஐயாவின் நூல்களில் ஒன்றான” பட்டறிவும் பயன்கள் + தமிழால் எழுந்தேன்” படித்தேன்.
கடந்த காலத்தில் விக்ரர் ஐயா அவர்கள் தமிழர்களாகிய நாம் அறியாமையை அடிமையாக வாழும் இழிநிலையை தாழ்வுமனப்போக்கான செயல்களை தன்னினப்பகையை நாம் முன்னிலைப்படுத்தி வாழ்வதால் என் இனம் அழிந்துகொண்டிப்பதை உணர்ந்து எம் அறிவுக் கண்ணை திறந்து எம் மனநிலையில் மாற்றத்தை தர தமிழர்கள் உலகவரலாற்றில் உயரிய தேசிய இனம் என்ற ஒர்மத்தை உறுதிப்படுத்தி சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழர்கள் தம் வரலாற்றை படிக்காதவரை அறியாமையில் இருந்தும் அடிமைமுறையில் இருந்தும் தாழ்வுமனப்போக்கிலிருந்தும் தன்னினப்பகையில் இருந்தும் மீள முடியாது.
தேவநேயப்பாவாணர் பல ஆண்டுகளுக்கு முன் சொன்னார்.
“தமிழின் மீட்சியே தமிழின் எழுச்சி”
அதற்கமையவே தமிழீழ மண்ணில் தமிழ் மீட்சிக்கான போர் வலிமை பெற்றது.அதனை உலக அனைத்து இனங்களாலும் நாம் அழிக்கப்பட்டோம்.2009 இன அழிப்புக்குப் பின் தமிழரின் தமிழ் மீட்சிக்கான போர் உலகத்தில் பேசப்படும் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழீழ தமிழ் மீட்சிக்கான தொடர்ச்சியே தமிழ்நாட்டில் தனித்துவமான தமிழ்த்தேசிய அரசியல் அடுத்த தலைமுறையினரிடையே எழுச்சி பெற்றிருக்கிறது.
தமிழ் மீட்சிக்கான தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய களப்போராளி செந்தமிழன் சீமான் அவர்களின் ஒருங்கிணைப்பில் 36 இலக்கம் (36,00,000) வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அரசியல் வலிமை பெற்றிருக்கிறது.
உறவுகளே, நாம் எமது வரலாற்றைப் படித்தால் மட்டுமே வரலாற்றைப் படைத்து தமிழர்களின் தமிழை மீட்டு வலிமை பெற முடியும்.
ஆரிய திராவிட மாயையை உடைத்தெறிந்து தமிழின் வலிமையை நிலைநிறுத்துவதே பாவாணரின் “தமிழின் எழுச்சியே தமிழின் மீட்சி”.
உறவுகளே, விக்ரர் ஐயா எமக்காகப் படைத்த பட்டறிவும் பயன்கள் + தமிழால் எழுந்தேன் என்ற நூலைப் படியுங்கள்.
நாம் படிக்கவேண்டிய நூல்
வேர்ச்சொல் மொழியிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *