ரோரரண்டோவில் “எழுவான்” தமிழ்த்தேசிய வணிக நிறுவனக் கூடல்

2054 விடை 15ஆம் நாள் காரிக்கிழமை(27.5.2023 Saturday) கனடா மார்க்கம் நகராட்சியில் அமைந்துள்ள கோட்யாட் மைத்ரிட்(Courtyard Marriott) உயர்நிலை விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. பல தமிழர்களின் தமிழ்த்தேசிய கனவை இக்கூடல் ஒழுங்கமைப்பாளர்களின் செயற்திட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.இக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் நலன்சார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.அவர்களில் பல இளையவர்கள் எழுவானோடு இணைந்து கொள்வதில் துடிப்பாக இருந்தார்கள்.
தமிழ்த்தேசிய வணிக நிறுவன கூடலில் அதிகப்படியான பெண்கள் இணைந்து கொண்ட இந்த நிகழ்வு அதிஉயர் சிறப்பாகும்.
தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் உடைமை பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டது.இதில் உலகத்தரத்தில் தமிழர்களுடைய பொருளாதாரம் தமிழர்களுக்குள் கட்டமைத்து தமிழர்களின் பொருளாதாரக்கட்டமைப்பு உலகப்பொருளாதார வலிமைக்கு ஈடாக உலகத் தமிழரின் பொருளாதாரக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி உயரிய உலகத்தமிழர் வளத்தை வாழ்வியலை வளமாக்குவதாகும்.
இதில் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்கள் சிங்கள இந்திய திராவிட சூழ்ச்சிக்குள் சிக்கிய தமிழர்கள் இணையமுடியாது.
“எழுவான்” தமிழ்த்தேசிய நிறுவனமானது அழிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழர்களின் அறிவு ஆளுமையைக் கட்டமைத்து தமிழர்களின் பல்துறை சார்ந்த பலத்தை வலிமையை பலமடங்கு உயர்த்துவதாகும்.
தமிழரின் நிர்வாகத்தின் கீழ் உணவுவிடுதிகள் சுவைச்சோலைகள் வைப்பகம் வானூர்திச்சேவை சுற்றுலா வணிகம் என பல்துறைகளில் முதலீடு செய்து தமிழர்களுக்கான வணிகத்தை தமிழருக்குள் பெருக்குதல் தமிழருக்கான வேலைவாய்ப்பைபப்பெருக்குதல் போன்றவற்றின் ஊடாக தமிழ்த்தேசித்தை ஒன்றிணைத்தல்.முதலீடுகள் அனைத்தும் முதலீடு செய்பவர்களின் பெயரில் மட்டுமே வாங்கப்படும்.எழுவான் நிறுவனத்தின் பெயரில் எந்த முதலீடும் வாங்கமுடியாது.
நாம் இதில் பங்கேற்று தமிழ்த்தேசியப்பரப்பில் தமிழர்களின் பலத்தை வலிமையை பலமடங்கு உயர்த்துவதற்கு எழுவான் வணிகநிறுவனத்தில் இணைந்து பங்காளராவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *