தக்கார்.ம.சோ. விக்ரர் அவர்களின் நூல் வெளியீடு 12.07.2025 கனடா இசுக்காபுரோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாய்த்தல் சிறப்போடு நடைபெற்றது. https://youtu.be/iAXZkBg_IQ8?si=xhztcTgBGutxYpdJ
தக்கார்.ம.சோ. விக்ரர் அவர்களின் நூல் வெளியீடு 12.07.2025 கனடா இசுக்காபுரோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாய்த்தல் சிறப்போடு நடைபெற்றது. https://youtu.be/iAXZkBg_IQ8?si=xhztcTgBGutxYpdJ
வேர்ச்சொல்.மொழியியல் வரலாற்று ஆய்வாளர் தக்கார் ம.சோ.விக்ரர் ஐயாவின் நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைகள் நிறைந்த தமிழர் வரலாற்று நூல் வெளியீட்டில் ஐயாவோடு பறை ஊடகம் மு.க.தமிழ்.
நாம் படிக்கவேண்டிய நூல் வேர்ச்சொல் மொழியியல் ஆய்வாளர் ம.சோ.விக்ரர் ஐயாவின் நூல்களில் ஒன்றான” பட்டறிவும் பயன்கள் + தமிழால் எழுந்தேன்” படித்தேன். கடந்த காலத்தில் விக்ரர் ஐயா அவர்கள் தமிழர்களாகிய நாம் அறியாமையை அடிமையாக வாழும் இழிநிலையை தாழ்வுமனப்போக்கான செயல்களை தன்னினப்பகையை நாம் முன்னிலைப்படுத்தி வாழ்வதால் என் இனம் அழிந்துகொண்டிப்பதை உணர்ந்து எம் அறிவுக் கண்ணை திறந்து எம் மனநிலையில் மாற்றத்தை தர தமிழர்கள் உலகவரலாற்றில் உயரிய தேசிய இனம் என்ற ஒர்மத்தை உறுதிப்படுத்தி சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளார்….
2054 விடை 15ஆம் நாள் காரிக்கிழமை(27.5.2023 Saturday) கனடா மார்க்கம் நகராட்சியில் அமைந்துள்ள கோட்யாட் மைத்ரிட்(Courtyard Marriott) உயர்நிலை விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. பல தமிழர்களின் தமிழ்த்தேசிய கனவை இக்கூடல் ஒழுங்கமைப்பாளர்களின் செயற்திட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.இக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் நலன்சார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.அவர்களில் பல இளையவர்கள் எழுவானோடு இணைந்து கொள்வதில் துடிப்பாக இருந்தார்கள். தமிழ்த்தேசிய வணிக நிறுவன கூடலில் அதிகப்படியான பெண்கள் இணைந்து கொண்ட இந்த நிகழ்வு அதிஉயர் சிறப்பாகும். தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் உடைமை…
2054 விடை 25 ஆம்நாள் காரிக்கிழமை (03.06.2023 Saturday, Dante Alighieri Academy Catholic Secondary School,2nd Street, Andrews Blvd, Toronto) மாலை டென்ரி அல்கிரி அக்கடமி நடுநிலைப்பள்ளியில் இசையில் ஆர்வம் கொண்ட பார்வையாளர்கள் புடைசூழ மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ் இன்னிசை இரவு நிதிசேர் நிகழ்வு.இந்நிகழ்வில் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரையிசைப் பாடல்கள் இசைநிகழ்வில் சிறப்புப்பெற்றது. இந்நிகழ்வில் கே.வி.மகாதேவன் அவர்களின் மகள் குடும்பத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றிருந்தார்கள்.அவர்களின் தந்தையாரோடான…
கடந்த 58 ஆண்டுகளாக தாய்மொழி தமிழில் பல ஆய்வு நூல்களைப் படைத்ததோடு பலநூறு தமிழ்மொழி ஆசிரியர்களை பட்டப்படிப்பாளர்களை கனடா அண்ணாமலை வளாகத்தினூடாக உருவாக்கிய பேராசிரியர் முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் அளப்பரிய பணிகளைப் பாராட்டி, கனடா விபுலாநந்தர் கலை மன்றத்தினரால் வாழ்நாள் செயல்திறன் பாராட்டுவிழா 2054 கன்னி 2 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு (17.09.2023) கனடா இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தவா இளையதம்பி,மாலினி சுரேந்திரன்,விசயரத்தினம்,லீலாவதி ஆறுமுகம்,புவி கனகலிங்கம்,துரை…
1965 ஆம் ஆண்டு முதல் 58ஆண்டுகளாக தமிழினத்தை பேரன்பு கொண்டு நேசித்த பேராசிரியர் முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களுக்கு இனப்பெருமையோடும் மொழிப்பெருமையோடும் கனடாவாழ் தமிழர்கள் வாழ்நாள் விருது வழங்கி மதிப்பளிப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் விபுலாநந்தர் அடிகளாரை மானசீகக் குருவாக கொண்ட தமிழ்த்துறைப்பேராசிரியரான பாலசுந்தரம் இளையதம்பி ஐயா அவர்களை, தளிர் ஊடக குழுமத்தினர் தளிர் ஊடக பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் “வாழ்நாள் திறன் பாராட்டு விருது” வழங்கி மதிப்பளித்துள்ளார்கள்.இவ்விழா கடந்த 2054 மடங்கல் 10ஆம்நாள் வெள்ளிக்கிழமை (25.07.2023)…
பகுதி-ஆ 2054 மடங்கல் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை( 25.08. 2023 )அன்று தளிர் ஊடகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவுவிழா கனடா ஒன்ராரியோ மாநிலம் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள சீன பண்பாட்டு நடுவக மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவை தளிர் ஊடக அறிவிப்பாளராக பணியாற்றும் அமுதக்குரலோன் ரகு அவர்கள் புதுமைப் பெண்ணாக வான்பரப்பை ஆளும் நவயூகா அவர்கள் சிறப்பாகத் தொகுத்துவழங்கினார்கள். இவ்விழாவில் தமிழர் பண்பாடான கொத்துவிளக்கு ஏற்றி பல்துறை ஆளுமையாளர்கள் விழாவை தொடங்கி வைத்தார்கள். கனடாப்பண்,தமிழ்மொழிப்பண்,ஈழமண்ணின்…
10 ஆவது ஆண்டு தளிர் ஊடக நிறைவுவிழா “ஆளுமைத் தமிழர்களுக்கான விருது வழங்கலும் இன்னிசை இரவும்” 2054 மடங்கல் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை( 25.08. 2023 )அன்று தளிர் ஊடடத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவுவிழா கனடா ஒன்ராரியோ மாநிலம் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள சீன பண்பாட்டு நடுவ மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. இவ்விழாவில் பல்சுவை நிகழ்வுகள் ஒழுங்கமைப்பட்டிருக்கிறது.இவ்விழாவில் கரீசு ராகவேந்திரா திரையிசைப் பிண்ணனிப்பாடகர் பங்கேற்று சிறப்பிக்க இன்று 22.08.2023 ரோரரண்டோ அனைத்துலக வானூர்தி…
தமிழினத்தின் உயரிய ஈழத்தாயின் உன்னத உயரிய படைப்பு. 12கோடி தமிழினத்தின் போற்றுதலுக்கும் பெருமைக்கும் உடைய இசைக்குயில். பல்லாண்டு வாழ்க வளமுடன் 12கோடி தமிழர்களும் வாழ்த்துகிறோம். https://www.facebook.com/watch?v=212703254592154