

2054 விடை 25 ஆம்நாள் காரிக்கிழமை (03.06.2023 Saturday, Dante Alighieri Academy Catholic Secondary School,2nd Street, Andrews Blvd, Toronto) மாலை டென்ரி அல்கிரி அக்கடமி நடுநிலைப்பள்ளியில் இசையில் ஆர்வம் கொண்ட பார்வையாளர்கள் புடைசூழ மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ் இன்னிசை இரவு நிதிசேர் நிகழ்வு.இந்நிகழ்வில் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரையிசைப் பாடல்கள் இசைநிகழ்வில் சிறப்புப்பெற்றது.
இந்நிகழ்வில் கே.வி.மகாதேவன் அவர்களின் மகள் குடும்பத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றிருந்தார்கள்.அவர்களின் தந்தையாரோடான பல நினைவுகளை பார்வையாளரோடு பகிர்ந்துகொண்டார்.
இசைத்துறையை பல ஆண்டுகளாக முன்னெடுத்துச் சென்ற மூவரை மதிப்பளிப்பு செய்திருந்தார்கள்.இசைக்கலைஞர் தெய்வேந்திரம் அவர்கள் பல ஆண்டுகளாக இன்னிசை நிகழ்வை நிகழ்த்தி வருபவர்.இசைக்கலைஞர் ரி.எம்.எசு.தெய்வேந்திரம் அவர்களுக்கு மதிப்பளிப்பு வழங்கியிருந்தார்கள்.
இந்நிகழ்வில் கே.வி.மகாதேவன் அவர்களுக்கு பெருமை சேர்க்கும்வகையில் கனடாவில் வாழும் தமிழர்களால் கனடாவில் பிறந்த பிள்ளைகளைக் கொண்டு இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இளம் இசைக்கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி இந்த இன்னிசைக் குழுவை முழுமையாக பொறுப்பெடுத்து திரையிசைப்பாடல் தெரிவு முதல் மேடையேறும்வரை கடும் உழைப்பை பயன்படுத்தி இன்னிசை நிகழ்வை வெற்றியாக்கியவர் இசை ஆசான் கார்த்திக் இராமலிங்கம்.
இசை ஆசான் கார்த்திக் இராமலிங்கம் இசைக்கல்லூரியை நடத்திவருகிறார்.இவரின் குறிக்கோள் கனடா ரோரண்டோ பெரும்பகுதியில் வாழும் இளந்தலைமுறையினரை இசைத்துறையில் வல்லவராக ஆளுமை நிறைந்தவர்களாக உருவாக்குவதே.அந்தவகையில் பல இசைக்கலைஞர்கள் குறிப்பாக இளைய கலைஞர்கள் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர். கனடாவில் பிறந்த எமது பிள்ளைகளுக்கு இசைத்துறை ஆசிரியராக பணியாற்றுகிறார்.அவரின் மாணவர்கள் தான் இன்னிசை நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்கு துணைநின்று பார்வையாளர்களை இருக்கையை விட்டு எழுந்து போகவிடாமல் இடைவேளையின்றி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி இசைநிகழ்வு சிறப்புப்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் இசைநிகழ்வுக்காக பலருடைய உழைப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது.இசைநிகழ்வுக்கான ஒத்திகைக்கான இடம், இளம் இசைக்கலைஞர்களுக்கான ஒத்திகையின் போது அவர்களுக்கான தேவைகள்,இசைக்கலைஞர்களின் பெற்றோர்கள், பல குடும்ப உறுப்பினர்கள் தொண்டராக பல்வேறு வழிகளில் துணைநின்றமை என பலரின் கூட்டுமுயற்சியில் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களுக்கு இந்நிகழ்வை படைதத்தமையிட்டு பெருமகிழ்ச்சி.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அத்தனை உயர்ந்த உள்ளங்களுக்கும் இசைப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் இராமலிங்கம் நன்றி பாராட்டியிருந்தார்.
தமிழீழ மண்ணில் இதயநோயால் பாதிக்ககப்பட்ட எமது உறவுகளுக்கு உயிர் காக்கும் உயரிய பணியை கனடாவில் வாழும் நிவாரணம் செந்தில் குமரன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தமை மிகச்சிறப்பாகும்.எமது உறவுகளுக்கு உயிர்கொடை வழங்கி வரும் செந்திகுமரனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.


All reactions:
Arun Vijay
