கலைக்குரிசில் குடும்பத்தின் மகத்தான நாட்டுக்கூத்துக் கலைஞர் யெயராசா சவரி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.
யெயராசா சவரி அவர்கள் நோர்வே மண்ணிற்கு புலம்பெயர்ந்த புகழ்பூத்த கலைஞர்.
யெயராசா சவரி அவர்கள் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா வந்திருந்தார். நாட்டுக்கூத்து கலைச்செம்மல் ச.மிக்கேல்தாசு ஐயா அவர்களின் “எதிரேறு எல்லாளன்” நூல்வெளியீட்டில் கலந்து சிறப்பித்திருந்தார். நூல்வெளியீட்டு விழா இசுக்காபுரோ நகரில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்றது.
