“பொய்யா விளக்கு” திரைப்படம்

நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரம் கொண்ட திரைப்படம்
தமிழ் இன அழிப்பின் வரலாற்றுப்பதிவு.தமிழீழ மண்ணில் தமிழ் இன அழிப்பின் கண்கண்ட சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட திரைப்படம்.”பொய்யயாவிளக்கு”எமது வரலாறு ஆவணம்.. எமக்கான வரலாற்று ஆவணம்.
ஒவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய திரைப்படம்.
இப்படி பல ஆயிரம் வரலாற்றுத்திரைப்படம் ஈழத்தமிழர்கள் உருவாக்கவேண்டும். பொய்யாவிளக்கு எமக்கு முன்னோடித்திரைப்படமாக எம்முன்னே திரைப்படமாக தயாரித்திருக்கிறார்கள்.
மே 14,15 ஆம் நாட்களில் கனடா றிச்மென்கில் யோர்க் சினிமா திரையரங்கில் காண்பிக்கப்பபெற்றது.
மக்கள் நுழைவுச்சீட்டுக்களை பெற்றிருந்தார்கள். மக்களின் ஆர்வமும் வருகையும் 50விழுக்காடு மட்டுமே.
ஈழத்தமிழர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி இனழிப்பின் வரலாற்று ஆவணங்களை திரைப்படமாக தயாரித்து வெளியிடவேண்டிய தேவை இருக்கிறது. தொடர்ந்தும் மக்கள் ஈழத்தமிழர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி திரைப்பபடப் போராளிகளை நாம் உருவாக்கவேண்டும்.
பொய்யாவிளக்கு திரைப்பட தயாரிப்புக்கு நிததிப்பற்றாக்குறை இருந்தபோது குறிப்பிட்ட சிலரால் கிடைக்கப்பட்ட நிதியைக்கொண்டு மிக சிறப்பாக யாரிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படம் பார்த்துவிட்டு வந்தவர்கள் கலங்கிய கண்ணோடு திரையரங்கைவிட்டு வெளியே வந்த காட்சியை பார்த்தோம்.
இது 2009 முள்ளிவாய்க்காலில் எப்படி தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதை சிறப்பாக திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.
திரைப்பட குழுவினருக்கு நன்றி.மருத்துவர் வரதன் அவர்களின் முயற்சியால் பல்வேறு நாடுகளில் திரையிடப்படுகிறது.அனைவரும் பொய்யயாவிளக்கைப் பார்க்கவேண்டும்.
நீங்கள் இணையத்தில் சென்று பார்வையிட:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *