இசைப்பிரியனுக்கு சிறப்பு நன்றி

2054 விடை 29 ஆம்நாள் காரிக்கிழமை (10.06.2023 Saturday) கனடா ரோரண்டோ இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள தமிழிசைக்கலாமன்ற அரங்கில் இசைப்பிரியன் அவர்களின் நெறியாள்கையில் இசைராகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இசைப்பிரியன் இசைதுறையில் பலஆண்டுகளாக இசைக்கலைஞனாக ரோரண்டோவில் மிளர்ககின்ற கலைஞர்
இந்த நிகழ்வில் இசைப்பிரியன் இசைக்கலைஞர்களின் சுயநலமமதை காழ்ப்புணர்ச்சி போன்ற கெட்ட எண்ணங்களின் முடிச்சை அறுத்தெறிந்திருக்கிறார்.
ஒரே மேடையில் “இசைக்கு ஏது எல்லை” இசைநிகழ்வின் ஊடாக நம்மவர்களை மதிப்பளிக்கும் பல்துறை விற்பன்னர் தமிழிசைக்கு முன்னுரிமை கொடுக்கும் இசைவள்ளல் வைரமுத்து சொர்ணலிங்கம்,இசை ஆசான் இசைதொகுப்பாளர் இசைக்கலைஞர்களை பேரன்பு கொண்டு நேசிக்கும் எசு.வி.வர்மன்,இன்னிய(Guitar) இசைக்கருவி வல்லுனர் ஆசான் இளையதலைமுறைக்கு இன்னிசைக்கருவியை கற்று கொடுப்பதில் பேரன்பு கொண்டு இசைமாணவர்களை தோழமை நிறைந்த பண்பாளர் இன்னிய இசை வள்ளல் குமரன்,இசையில் புகழ்பூத்த இசைக்கலைஞர் இசைக்குழு நிறுவனர் பயசு,இசையில் புகழ்பூத்த இசைக்கலைஞர் இசைக்குழு நிறுவனர் அரவிந்தன்,இசையில் புகழ்பூத்த இசைக்கலைஞர் இசைக்குழு நிறுவனர் சுபோதன்,இசையில் புகழ்பூத்த இசைக்கலைஞர் இசைக்குழு நிறுவனர் ரயனி அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றிய பெருமைக்குரியவர் இசைக்கலைஞர் இசைப்பிரியன்.
இந்நிகழ்வில் ஏனைய இசைக்கலைஞர்களையும் இணைத்து அனைத்து இசைக்கலைஞர்களையும் பெருமைப்படுத்திய இசைப்பிரியனுக்கு நன்றி.
நம்மை நாமே பெருமைப்படுத்தவேண்டும்.நமது கலைஞர்களை இசைவல்லுனராக உருவாக்கும் பணியை பல இசை ஆசான்கள் செய்து வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் நன்றி. பறை ஊடக குழுமம் இசைப்பிரியனின் “இதயராகங்கள்” நிகழ்வை மகிழ்வோடு நெஞ்சார வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *