2054 விடை 30 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை (11.06.2023) கனடா ஒன்ராரியோ இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள தமிழ்ப்பூங்கா கல்வி நிலையத்தில் இரவு 7:30 மணிக்கு இக்கூடல் மண்டபம் நிறைந்த தமிழர்களோடு சிறப்பாக நடைபெற்றது.
ரோரண்டோ நகரசபைக்கான முதல்வர் தேர்தலில் போட்டியிடும் ஒலிவியா சைவ் அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் வாக்களித்து வெல்ல வைக்கவேண்டும்.வெல்லவைப்போம்.
ஒலிவியா சைவ் தமிழர்களின் ரோரண்டோ பெரும் பகுதிகளில் தமிழரின் போராட்டக் களங்களில் கலந்து முழுமையான ஆதவை வழங்கியவர்.அவரின் தெய்வத்திரு லக் லெயிட்டன் அவர்கள் தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்கியதோடு எம்மோடு களத்தில் நின்ற பெருமகன்.
எம்முடைய உரிமைப்போராட்டத்திற்காக எம்மோடு நிற்பவர்களை அரசியல் அதிகாரத்தில் ஏற்றினால் மட்டுமே நாம் எமக்கான உரிமைப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்யமுடியும்.
கனடா வாழ் தமிழர்களாகிய நாம் கனடா நாடு வழங்கிய அரசியல் உரிமையைப் பயன்படுத்தி அறிவாயுதம் ஏந்தி எம்மை நாமே ஆளுவதற்கான தமிழீழ நாட்டை இந்தியாவின் உதவியின்றி பெறும் பலம் கனடாவாழ் தமிழர்களிடம் தான் உண்டு.
இக்கூடல் ரோரரண்டோ கல்விச்சபை உறுப்பினர் நீதன் சாண் ஒழுங்கமைத்திருந்தார்.நீதன் சாண் அழைப்பை ஏற்று ஒலிவியா சைவ் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தேர்தல் பணிகளுக்காக பலர் தொண்டர்களாக பணியாற்ற முன்வந்துள்ளார்கள்.இணைய விரும்பியவர்கள் தொடர்பு கொண்டு தொண்டராக இணையலாம்.
