வாழ்நாள் செயல்திறன் பாராட்டு விழா

கடந்த 58 ஆண்டுகளாக தாய்மொழி தமிழில் பல ஆய்வு நூல்களைப் படைத்ததோடு பலநூறு தமிழ்மொழி ஆசிரியர்களை பட்டப்படிப்பாளர்களை கனடா அண்ணாமலை வளாகத்தினூடாக உருவாக்கிய பேராசிரியர் முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் அளப்பரிய பணிகளைப் பாராட்டி, கனடா விபுலாநந்தர் கலை மன்றத்தினரால் வாழ்நாள் செயல்திறன் பாராட்டுவிழா 2054 கன்னி 2 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு (17.09.2023) கனடா இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தவா இளையதம்பி,மாலினி சுரேந்திரன்,விசயரத்தினம்,லீலாவதி ஆறுமுகம்,புவி கனகலிங்கம்,துரை கோபால்,மகேந்திரன்,மாணிக்கம் இராசரட்ணம்,காப்பாளர் நல்லரட்ணம் மாசிலாமணி,சின்னையா சிவநேசன்,அகணி சுரேசு,பேராசிரியர் நரேசு தேவதாசன்,யோகா அருள்சுப்பிரமணியம்,சிறீ கதிர்காமநாதன்,சிந்தனைப்பூக்கள் பத்மநாதன்,மாவிலி மைந்தன் சண்முகராசா,விமலன் அருளானத்தராசா என பல்துறைக் கல்வியாளர்கள் கொத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள்.தொடர்ந்து சுவாமியின் பண்,கனடாப்பண்,தமிழ்த்தாய்ப்பண் இசைக்கப்பட்பெற்றது.

“சின்னஞ்சிறு பெண்போலே” பாடலுக்கு இளம் ஆடல் கலைஞர் வரவேற்பு ஆடலுக்கு வழங்கியிருந்தார்.விபுலாநந்தர் கலாமன்றம் நடத்திய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

தொடர்ந்து பேராசிரிக்குரிய

பாராட்டுவிழாவில் வரவேற்புரையை காப்பாளர் நல்லரட்ணம் நகுலசிகாமணி வழங்கியிருந்தார்.அமைப்பின் தலைவர் புருசோத்தமன் தலைமையுரையை வழங்கியிருந்தார்.

பேராசிரியர் அவர்கள் பற்றிய அறிமுக உரையை குமரகுரு வழங்கியிருந்தார்.

இவ்விழாவில் பேராசிரியரோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய யோசெப் சந்திரகாந்தன் அடிகளார் பேராசிரியரின் பணிகள் பற்றி வாழ்த்துரை ஆற்றினார்.

பொன்னையா விவேகானந்தன் உரையாற்றும் போது பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் மாணவர்களோடு பணியாற்றும் சிறப்புப் பற்றி விளக்கியிருந்தார்.பேராசிரியர் இதுவரை 150க்கு மேற்ப்பட்ட மாணவர்களை தமிழ்மொழிப்பட்டப்படிப்பில் உருவாக்கியிருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்தார்.

சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் பேசும்போது பேராசிரியர் மாணவிகளை “தங்கச்சி” என்று அழைப்பது பேராசிரியரின் பேரன்பு.அந்தப் பேரன்பைப் பற்றி பேராசிரியரிடம் படித்த மாணவி ஒருவர் மேடையில் பேசும் போது பேராசிரியர் அப்பாவாகவும் விமலா அம்மையாரை அம்மாவாகவும் நாம் பழகிக்கொள்கிறோம் என்ற உயரிய பண்பைவெளிப்படுத்திய செய்தியை குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ உரிமைப்போராட்ட காலத்தில் பேராசிரியர் அவர்களின் அனைத்து உடைமைகளை அழிக்கப்பட்டதால் எந்த சான்றுகளும் இல்லையென்றசெய்தியை கேட்டபோது, பேராசிரியரும் நானும் பெல்தெனிய பல்கலைக்கழகத்தில் ஒன்றாக நின்று எடுத்த படம் ஒன்று என்னிடம் இருந்தது அந்தப்படத்தின் பிரதி ஒன்றை நான் கொடுத்திருந்தேன் என சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் அவர்கள் சொல்லியிருந்தார்.

மாலினி மைந்தன் சண்முகராசா அவர்கள் பாராட்டு விழா நூலைப்பற்றி அறிமுகவுரையை வழங்கியிருந்தார்.

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்ததோடு விபுலாநந்த அடிகளை குருவாக ஏற்று நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைக்கு மேலும் வலுவூட்டும் பல அரிய பணிகளை இனப்பெருமையோடும் மொழிப்பெருமையோடும் கனடாமண்ணில் பணியாற்றிக்கொண்டிருக்கின்ற பேராசிரியரையும் அவரின் மனைவி விமலா அம்மையாரையும் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றி வணங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *