பகுதி-ஆ
2054 மடங்கல் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை( 25.08. 2023 )அன்று தளிர் ஊடகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவுவிழா கனடா ஒன்ராரியோ மாநிலம் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள சீன பண்பாட்டு நடுவக மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
விழாவை தளிர் ஊடக அறிவிப்பாளராக பணியாற்றும் அமுதக்குரலோன் ரகு அவர்கள் புதுமைப் பெண்ணாக வான்பரப்பை ஆளும் நவயூகா அவர்கள் சிறப்பாகத் தொகுத்துவழங்கினார்கள்.
இவ்விழாவில் தமிழர் பண்பாடான கொத்துவிளக்கு ஏற்றி பல்துறை ஆளுமையாளர்கள் விழாவை தொடங்கி வைத்தார்கள். கனடாப்பண்,தமிழ்மொழிப்பண்,ஈழமண் ணின் விடுதலைக்காக உயிர்க்கொடை தந்த மாவீரத்தெய்வங்களுக்கு அமைதி வணக்கம் செலுத்தினோம்.
விழாவில் சண்முகநாதன் ஐயம்பிள்ளை வரவேற்புரை ஆற்றினார்.ஒன்ராரியோ மாநில அவையின் உறுப்பினர் லோகன் கணபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தளிர் ஊடகப்பணியைப் பாராட்டி ஒன்ராரியோ மாநில அவையின் சார்பாகவும் ஒன்ராரியோ மாநில முதலமைச்சர் உயர்திரு டக் போட் சார்பாக வாழ்த்திய வாழ்த்துமடல் வழங்கி மதிப்பளித்திருந்தார்.
தளிர் ஊடக அமைப்பின் தலைவர் தொழிலதிபர் தாசு அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஆடல்கலைஞர்கள் பாடல்களுக்கு ஆடலை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள்.
தளிர்வானொலி புதுமைப்பெண் நிகழ்ச்சித்தொகுப்பாளரால் புதுமைப்பெண்களாக இனம் கண்ட புதுமைப்பெண்களை தளிர் ஊடகக் குழுமத்தினர் விழாவில் மதிப்பளித்து விருதும் வழங்கினார்கள்.
தளிர் வானொலியில் கிராமத்து வதனம் நிகழ்ச்சித்தொகுப்பாளரால் இனம் கண்டு கிராமத்து வதனத்தில் மதிப்பளித்து விருதும் வழங்கினார்கள்.
இசைக்குழுவின் முதல்வரும் இசைக்கலைஞருமான அரவிந்தன் அவர்களின் மெகா ரியூனசின் இன்னிசை மழையில் தமிழ்நாட்டின் திரையிசைப் பின்ணணிப்பாடகர் கரீசு ராகவேந்திரா அவர்களோடு கனடாப் பாடகர்களின் இசைக்குரல்களும் இணைந்து விழாவில் பங்கேற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள்..
தளிர் ஊடகப்பணி பலதடைகளை உடைத்து வெற்றிவிழாவாக்கிய தளிர் ஊடக உறுப்பினர்கள் வணிகமுதல்வர்கள்,தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் தோழமைநிறைந்த ஊடக உறவுகள் அனைவருக்கும் தளிர் ஊடக முதல்வர் சிவமோகன் அவர்களும் தளிர் ஊடக அமைப்பின் தலைவர் தொழிலதிபர் தாசு அவர்களும் இணைந்து நன்றியை தெரிவித்துள்ளார்கள்.
