2054 விடை 30 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(11.06.2023) காலை 10 மணிக்கு கனடா ஒன்ராரியோ மாநிலம் பிரம்ரன் நகரில் அமைந்துள்ள 60 இக்குனா ரேயில் (60, IGuana Trail)தெருவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிற்கு “திருகோணமலை பூங்கா” எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வினை “(Trinco vision)றிங்கோவிசன் கனடா” அமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.பி ரம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் நகர உறுப்பினர்கள் புடைசூழ திருகோணமலைப்பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
ஈழமண்ணில் சிங்களமக்களும் சிங்கள அரசும் தமிழர்களின் தொன்மையை 2500ஆண்டாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
1948 ஆம் ஆண்டு முதல் 2009வரை சிங்கள மக்களும் சிங்கள இனவெறியரசும் 5இலட்சம் அப்பாவித்தமிழர்களைக் கொன்றும் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்களை விதவைகளாக்கியும் பண்பாட்டுத்தளங்களின் தமிழரின் தொன்மை அடையாளங்களையும் தொன்மையான ஊர்ப்பெயர்களை அழித்துக் கொண்டிருக்கிறது.
சிங்களவர்களால் தமிழின அழிப்பில் இருந்து தப்பி கனடாமண்ணை வாழ்விடமாக்கிய ஈழத்தமிழர்கள் ஈழத்திருநாட்டின் தலைநகரான பல்வேறு தொன்மைகளை சுமந்து நிற்கும் திருகோணமலை மண்ணைப் பெருமைப்படுத்தியும் பிரம்ரன் நகரப்பூங்காக்களில் ஒன்றை “திருகோணமலைப்பூங்கா” எனப்பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
ஈழமண்ணில் வலிகளை தொன்மைகளை மீள் உருவாக்கம் செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பெரும்பணி அளப்பரியது.
இந்த உயரிய பணிக்கு உழைத்த பிரம்ரன் நகரமுதல்வர் அவரோடு இணைந்து பணியாற்றும் நகர உறுப்பினர்கள், றிங்கோ விசன் கனடா அமைப்பினர் அப்பகுதியில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் உலகத்தமிழர்கள் சார்பாக பறை ஊடகக் குழுமம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
