ஈழச்செல்வி மாதூலாணி.

ஈழமண்ணின் வலிமை செலுமை வீரியம் வீரம் எழுச்சி மீட்சி அன்பு காதல் அனைத்துக்கும் உயிரூட்டிய ஈழச்செல்வி மாதூலாணி.
ஈழமண்ணில் இருந்து இலண்டனுக்கு இடம்பெயர்ந்த தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் மாதூலாணி.இவர் இசைத்துறையில் தன்னை வளமாக்கிக் கொண்டு தமிழ்நாட்டில் சிதமிழ் தொலைக்காட்சியில் பாடும் போட்டிக்குத் தெரிவானார்.
மாதூலாணி சிதமிழ் நிகழ்வில் பாடிய பாடல்கள் அவரின் திறமையால் சிறப்புப் பெற்றது.
குறிப்பாக ஈழமண்ணுக்காக மெல்லிசை மேதை எம் எசு விசுவநாதன் ஐயாவின் “விடை கொடு நாடே” என்ற பாடலை ஈழமண்ணுக்காக பாடி உலகத்தமிழரின் உயரிய பாடகியாக உயர்ந்துள்ளார்.
ஈழமண்ணின் மரபணு என்பது வலிமை செலுமை வீரியம் வீரம் எழுச்சி மீட்சி அன்பு காதல் என பல்வேறு கூறுகள் மூலம் மண்ணை நேசிக்கும் ஆற்றல் கொண்டதை உலகப்புகழ் பெற்ற பாடகி மாதுலாணி இப்பாடல் வழியாக உலகத்தமிழர்களுக்கு புதுஎழுச்சியை தந்துள்ளார்.மாதுலாணி வளமாக வாழ்க.
குறிப்பு:கனடாவில் தளிர் ஊடக நிகழ்வுக்காக மாதுலாணி கனடாவுக்கு வந்திருந்தார்.அவரை கனடாவாழ் தமிழர்கள் வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *