
ஊர்முகம் அமைப்பு பெருமையுடன் வழங்கிய உலகமகளிர் நாள் வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழா 2054 மீனம் 7ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(March 19,2023) பிற்பகல் 2மணிக்கு எதோபிக்கோ நகராட்சியில் அமைந்துள்ள திட்டில்ரவுண் பல்பண்பாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் முதன்மைப்பேச்சாளர்களாக கௌசல்யா பார்த்தீபன் மார்க்கம் நகரசபை 7ஆம் வட்டார உறுப்பினர் யொனித்தா நாதன் அண்ணாமலைப்பல்கலைக்ககழக கனடா வளாக விரிவுரையாளர் நாகேசுவரி சிறீகுமாரகுரு தளிர்வானொலி அறிவிப்பாளர் நவகீதா முருகண்டி அவர்களோடு சிறப்புப்பேச்சாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழக கனடாவளாக விரிவுரையாளர் இளையதம்பி பாலசுந்தரம் பங்கேற்றார்கள்.
சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.பட்டிமன்றப்பேச்சாளர்களாக சுகந்தி கரன் மைதிலி இட்ணசிங்கம் பானுமதி கலைவரன் ஒரு அணியாகவும் விமலாதேவி புசுப்பநாதன் தயாநிதி ரகுநாதன் சந்திரா பாலேசுவரன் மறு அணியாக இணைந்து பட்டிமன்றத்தில் பங்கேற்றார்கள்.
இவ்விழாவின் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழங்கியவர் சிவயோதி யெயக்குமார்.இவ்விழாவை ஒருங்கமைத்து சிறப்பாக செயற்படுத்தியவர் கமலவதனா.



