தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் புத்தாண்டு விழா2054( 2023)

தளிர் ஊடகத்தின் தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் புத்தாண்டு விழா அதிஉயர் சிறப்புக்களால் நிறைவாக மகிழ்ச்சியாக கொண்டாடினோம். தமிழ் மரபுரிமைப் பாடல் வெளியீடு சிறப்பு தமிழ்த்தேசியக் கொடியேற்றத்தோடு விழா தொடங்கப்பெற்றது. இவ்விழா கனடா இசுக்காபரோ நகராட்சியில் அமைந்துள்ள குயின் பலசு பண்பாட்டு மண்டபத்தில் 2054 சுறவம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (February 12 2023)காலை 9மணிக்கு தொடங்கபபெற்றது.

Read More

” தாயவள் நாள் இரவுப்பொழுது 2023 “

2054 விடைத்திங்கள் 2ஆம் நாள்(14.05.2023) தாய்மைக்கு சிறப்பு நாளாக உலக மக்கள் தத்தமது தாயைக் கொண்டாடி வருகிறார்கள்.தாயவள் நாளை சிறப்பித்து கனடாவைத் தளமாகக் கொண்டு தமிழ்தேசிய ஊடகப்பணியில் சிறப்பாக செயற்படும் தளிர் ஊடகத்தின் ஆதரவில் 2054 விடைத்திங்கள் 2ஆம் நாள் (14-05-2023) மாலை 5.00 மணிக்கு கனடா,ஒன்ராரியோ ,இசுக்காபுரோ நகராட்சிக்குள் அமைந்திருக்கும் குயின் பலசு பண்பாட்டு மண்டபத்தில் ( The Queen Palace Banquet Hall) இல் சிறப்பாக நடைபெற்றது..இச்சிறப்பு நிகழ்வை அறிவுப்பெருந்தகை உயர்திருமதி.விமலா பாலசுந்தரம் அவர்களின்…

Read More

தளிர் ஊடக 10ஆவது ஆண்டில் விருது வழங்கி,மதிப்பளித்து இன்னிசையோடு நிறைவு

பகுதி-ஆ 2054 மடங்கல் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை( 25.08. 2023 )அன்று தளிர் ஊடகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவுவிழா கனடா ஒன்ராரியோ மாநிலம் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள சீன பண்பாட்டு நடுவக மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவை தளிர் ஊடக அறிவிப்பாளராக பணியாற்றும் அமுதக்குரலோன் ரகு அவர்கள் புதுமைப் பெண்ணாக வான்பரப்பை ஆளும் நவயூகா அவர்கள் சிறப்பாகத் தொகுத்துவழங்கினார்கள். இவ்விழாவில் தமிழர் பண்பாடான கொத்துவிளக்கு ஏற்றி பல்துறை ஆளுமையாளர்கள் விழாவை தொடங்கி வைத்தார்கள். கனடாப்பண்,தமிழ்மொழிப்பண்,ஈழமண்ணின்…

Read More

கனடாவில் இனப்பெருமையோடும் மொழிப்பெருமையோடும் “திருகோணமலைப் பூங்கா”

2054 விடை 30 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(11.06.2023) காலை 10 மணிக்கு கனடா ஒன்ராரியோ மாநிலம் பிரம்ரன் நகரில் அமைந்துள்ள 60 இக்குனா ரேயில் (60, IGuana Trail)தெருவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிற்கு “திருகோணமலை பூங்கா” எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வினை “(Trinco vision)றிங்கோவிசன் கனடா” அமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.பிரம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் நகர உறுப்பினர்கள் புடைசூழ திருகோணமலைப்பூங்கா திறந்து வைக்கப்பட்டது. ஈழமண்ணில் சிங்களமக்களும் சிங்கள அரசும் தமிழர்களின் தொன்மையை 2500ஆண்டாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு…

Read More

இசைக்குயில்மாதுளானிக்கு பேரன்பு கொண்டு வாக்களியுங்கள்.

சி தமிழ் பாடகர் தெரிவில் இசைக்குயில்மாதுளானிக்கு பேரன்பு கொண்டு வாக்களியுங்கள். https://zeetamilkv.zee5.com/saregamapas3voting இது உங்கள் நேரம். மாதுளானியின் இலக்கம் 9152 9152 25 நீங்கள் வாக்கு அளியுங்கள் நீங்கள் அந்த ஆதரவை கொடுக்கவேண்டும். https://zeetamilkv.zee5.com/saregamapas3voting அன்பு வாழ் தமிழ் உறவுகளே . நீங்கள் மாதுளானிக்கு On Line மூலம் வாக்களிக்கின்றபோது அதாவது கேள்விகளை நிரப்புகின்றபோது இரண்டு விடையத்தில் கவனம் செலுத்துங்கள் ஒன்று தொலைபேசி எண்களை போடுகின்றபோது 0 பூச்சியத்தை தவிர்க்க வேண்டும் உதாரணமாக 7505290078 என்றுதான் நீங்கள்…

Read More

தமிழர் வரலாற்று நூல் வெளியீட்டில்

வேர்ச்சொல்.மொழியியல் வரலாற்று ஆய்வாளர் தக்கார் ம.சோ.விக்ரர் ஐயாவின் நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைகள் நிறைந்த தமிழர் வரலாற்று நூல் வெளியீட்டில் ஐயாவோடு பறை ஊடகம் மு.க.தமிழ்.

Read More

நாட்டுப் பற்றாளர் வர்ணராமேசுவரன் வழியனுப்பும் நிகழ்வு

2052 கன்னித்திங்கள் 26 ஆம் நாள் திங்கட்கிழமை நாட்டுப்பற்றாளர் வர்ணராமேசுவரன் அவர்களை தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் புடை சூழ இறுதி நிகழ்வு நிறைவேறியது. இசைப்போராளி வர்ணராமேசுவரனின் இசைவல்லமைக்கு சிறப்பித்து மதிப்பளித்து பறை இசை முழக்கி வெற்றுடல் தீயுடன் இணைந்து உலலககத்தமிழரின் மனதில் குடிகொண்டார். கனடாவில் வாழும் தமிழர்கள் “நாட்டுப்பற்றாளர்” என்ற உயரிய விருதை வர்ணராமேசுவரன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

Read More

மகத்தான நாட்டுக்கூத்துக்கலைஞர் யெயராசா சவரி அவர்களின் இறப்புத்திருவோலை

கலைக்குரிசில் குடும்பத்தின் மகத்தான நாட்டுக்கூத்துக் கலைஞர் யெயராசா சவரி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். யெயராசா சவரி அவர்கள் நோர்வே மண்ணிற்கு புலம்பெயர்ந்த புகழ்பூத்த கலைஞர். யெயராசா சவரி அவர்கள் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா வந்திருந்தார். நாட்டுக்கூத்து கலைச்செம்மல் ச.மிக்கேல்தாசு ஐயா அவர்களின் “எதிரேறு எல்லாளன்” நூல்வெளியீட்டில் கலந்து சிறப்பித்திருந்தார். நூல்வெளியீட்டு விழா இசுக்காபுரோ நகரில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்றது.

Read More